Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளித்த மாநில அரசு
உத்தர பிரதேச அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டம், மூத்த குடிமக்களுக்கான ஒரு நேர்த்தியான திட்டமாக நாடு முழுதும் பிரபலமாகி வருகிறது. அதில் சமீபத்தில் அரசு பல மேம்பாடுகளை செய்துள்ளது. இவற்றின் மூலம் திட்டத்தின் செயலாக்கம் இன்னும் சிறப்பாகியுள்ளது.
Family ID: ஒரு குடும்பம், ஒரு அடையாளம்
ஓய்வூதிய வழங்கலை வெளிப்படையாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்காக சமூக நலத்துறை தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. புதிய முறையின் கீழ், தகுதியுள்ள மூத்த குடிமக்கள் அடையாளம் காணப்பட்டு, "ஒரு குடும்பம், ஒரு அடையாளம்" என்ற குடும்ப அடையாள அட்டை மூலம் தானாகவே சரிபார்க்கப்படுவார்கள்.
National Old Age Pension Scheme: ஓய்வூதியத் திட்டத்தில் உ.பி. அரசு எடுத்த முடிவு
பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் நேரடியாக தாமதமின்றி வரவு வைக்கப்படுவதை இது உறுதி செய்யும். தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் மரியாதைக்குரிய ஓய்வூதியத்தை உறுதி செய்வதை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நோக்கமாகக் கொண்டுள்ளதாக சமூக நலத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அசிம் அருண் தெரிவித்தார்.
சமூக நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எல்.வெங்கடேஷ்வர்லு, மாநிலத்தில் எந்த தகுதியுள்ள மூத்த குடிமகனும் விடுபடாமல் இருக்க, குடும்ப அடையாள அட்டை அடிப்படையிலான செயல்முறையை கவனமாக செயல்படுத்துமாறு அனைத்து பிரிவு ஆணையர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Senior Citizens: மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை
- இந்தப் புதிய செயல்முறையின் கீழ், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
- குடும்ப அடையாள அட்டையில் உள்ள அவர்களின் வயது மற்றும் குடும்ப விவரங்கள் அவர்களின் தகுதியைத் தீர்மானிக்கும்.
- அடுத்த 90 நாட்களுக்குள் 60 வயதை அடைபவர்களும் தானாகவே பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
- பயனாளிகளின் ஒப்புதலை SMS, WhatsApp அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் பெறவும், சரியான நேரத்தில் ஒப்புதல் மற்றும் நேரடி பலன் பரிமாற்றம் (DBT) கொடுப்பனவுகளை உறுதி செய்யவும் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைப்பில் சேர்க்கப்படும் சிறப்பு வசதிகள்
வாழ்க்கைச் சான்றிதழ் சரிபார்ப்புகள், சந்தேகத்திற்கிடமானவர்களின் பட்டியல்களைத் தயாரித்தல், தவறான கொடுப்பனவுகளைத் தடுத்தல் மற்றும் பிழைகள் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க வழக்கமான தரவு மதிப்பாய்வு போன்ற சிறப்பு நடவடிக்கைகள் இந்த அமைப்பில் சேர்க்கப்படும். இறந்த அல்லது தகுதியற்ற பயனாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாகத் தீர்க்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Monthly Pension: மாத ஓய்வூதியமாக ரூ.1,000
இப்போது மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் விண்ணப்பத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ₹1,000 ஓய்வூதியம் பெறுகின்றனர். இருப்பினும், மூத்த குடிமக்களின் பெயர்கள் குடும்ப அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டவுடன், முழு விண்ணப்ப முறையும் நீக்கப்பட்டு, செயல்முறை முழுமையாக தானியங்கிமயமாக்கப்படும். இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு மாதா மாதம் தாமாகவே ஓய்வூதியம் வநுசேரும்.
முதலில் இந்த பகுதிகளில் தொடங்கப்படும்
இந்த புதிய ஓய்வூதிய முறை முதலில் அமேதி, காஸ்கஞ்ச், கோரக்பூர், லலித்பூர் மற்றும் பஸ்தி ஆகிய இடங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிறகு,
இது மாநிலம்முழுவதும் அறிமுகம்செய்யப்படும். அனைத்து மாவட்டங்களும் 30 நாட்களுக்குள் விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) தயாரிக்க வேண்டும். தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 67.50 லட்சம் மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்
0 Comments