Header Ads Widget

Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு


Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு

Ration card special camp: அரசின் திட்டங்களை பெற ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களாக உள்ள நிலையில், ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் ஒரே நாளில் வழங்கும் வகையில் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு

Ration card special camp

ரேஷன்கார்டு- பொங்கல் பரிசு தொகுப்பு

ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாய விலைக்கடைகளில் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 36 ஆயிரம் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 2 கோடியே 27 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. அதில், அரிசி, பச்சரிசி இலவசமாகவும், சக்கரை, பாமாயில், கோதுமை, பருப்பு குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும் அரசின் திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு, மழை வெள்ள பாதிப்பு நிவாரண் போன்றவற்றிக்கு அடையாள ஆவணமாக உள்ளது.

55ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டு

எனவே புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு தற்போது வரை  1,07,910 விண்ணப்பங்கள் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தகுதியான சுமார் 55,000 நபர்களுக்கு விரைவில் ரேசன் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே ரேஷன் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்கு உணவு பொருள் வழங்கல் துறை அலுவலத்திற்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. அதிலும் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், தற்போது பொதுமக்களுக்கு சூப்பரான வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை ( 13.12.2025) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.ன்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 13.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரேஷன் கார்டு திருத்தம்- சென்னையில் சிறப்பு முகாம்

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் எனவும்,  பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments