நவம்பர் 25, 1949 அரசியலமைப்பு சபையின் இறுதி அமர்வில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் வழங்கிய உரை.
இந்தியக் குடியரசின் எதிர்காலத்துக்கு அடித்தளமிட்ட வரலாறு. அரசியலமைப்பு உருவாக்கத்தில் அயராது உழைத்த அவருக்குத் தோன்றிய மகிழ்ச்சியும், கவலைகளும், எச்சரிக்கைகளும்
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய 2 வருடம் 11 மாதம் 18 நாட்களை ஒரு கடினமான ஆனாலும் பெருமையாக நினைக்கத்தக்க பயணம் என விவரித்தார்.
மேலும்
இந்த ஆவணம் ஒரு சட்டப்புத்தகம் மட்டுமல்ல இந்திய சமுதாயத்தை நியாயம் மற்றும் சமத்துவத்துக்குத் திருப்பும் ஒரே வழிகாட்டி எனவும்.
நாட்டின் உண்மைகளையும், பல்வேறு மக்களின் குரல்களையும், எதிர்கால தலைமுறைகளின் தேவைகளையும் இணைத்து எழுதப்பட்ட ஒரு தேசிய ஒப்பந்தம் அதுவே இந்திய அரசியலமைப்பு என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
"நாம் ஜனநாயகத்தை உருவாக்கியிருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவது மக்களின் கையில் உள்ளது."
நாட்டு மக்கள் அரசியலமைப்பு நெறிகளை மதிக்காவிட்டால்
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய மூன்று தூண்களைப் பாதுகாக்காவிட்டால்
இந்த ஜனநாயகம் உயிரிழந்துடுமே என்றார்
அரசியலமைப்பின் எழுத்துக்களை விட அரசியலமைப்பு நெறிமுறையை மக்களும் அரசியல் தலைமையும் காக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சமூகச் சமத்துவமின்றி அரசியல் சுதந்திரம் பயனில்லை .
சாதி அடக்குமுறையும் சமுதாயப் பாகுபாடும் நீங்காவிட்டால் இந்திய ஜனநாயகம் வலுவாக நிற்காது.
அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டது.
ஆனால் சமூகச் சுதந்திரம் இன்னும் பெறப்படவில்லை.
ஒருவரை அதிகமாக உயர்த்தி எல்லா அதிகாரத்தையும் அவரிடம் கொடுத்தால், அது ஜனநாயகத்தை அழிக்கும்.
இந்த வார்த்தைகள் இன்று கூட இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ஜனநாயக வாழ்க்கைக்கான திசைகாட்டியாக உள்ளது.
"ஜனநாயகத்தை எழுப்புவது எளிது பாதுகாப்பது தான் கடினம்."
பதிவு - ரே.மு.தம்மதுரை.
0 Comments