8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா?
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்விகளுக்கான பதில் கிடைக்குமா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Pensioners: 8வது ஊதியக்குழுவிற்கான பரிந்துரை விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 12-18 மாதங்களில் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பல ஊழியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர்களின் அமைப்புகளும் தற்போதுள்ள TOR பற்றி பல கவலைகளை எழுப்பியுள்ளன. ஊழியர் சங்கங்கள் TOR -இல் காணும் குறைகள் என்ன? ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு காரணம் என்ன? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Terms of Reference: பரிந்துரை விதிமுறைகளால் ஓய்வூதியதாரர்கள் அதிருப்தி
8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகள் (ToR) குறித்து ஓய்வூதியதாரர் அமைப்புகள் குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளன. இதில் பல முக்கிய பிரச்சனைகள் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன.
- Pension Revision: முதன்மையாக, ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியங்களை திருத்துவதற்கான வெளிப்படையான விதிகள் விலக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
- Old Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமான OPS -ஐ மீட்டெடுப்பதற்கான கோரிக்கை உள்ளது.
- Unfunded Cost Clause: ToR இல் இடம்பெற்றுள்ள "பங்களிப்பு அல்லாத ஓய்வூதிய திட்டங்களின் நிதியற்ற செலவு" என்ற சொற்றொடர் ஓய்வூதிய வழங்கலை நிதிச் சுமையாக சித்தரிப்பதால் அதை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
- Commuted Pension: கம்யுடேஷன் பென்ஷன், அதாவது ஓய்வூதிய மாற்று கால அளவை 11 ஆண்டுகளாக குறைக்கக் கோரிக்கை.- Fitment Factor: ஊதிய, ஓய்வூதிய சமத்துவத்தை உறுதி செய்ய, பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் கோரப்படுகின்றது.
Parliament Winter Session: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விடை கிடைக்குமா?
டிசம்பர் 2, 2025 அன்று, 8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திருத்தம் முன்மொழியப்படவில்லையா என்பது குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் மாநிலங்களவையில் பதிலளிப்பார். மக்களவையைப் போலவே, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடி நிவாரணமாக அகவிலைப்படி/அடையாளக் குறைப்பு நிவாரணத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்த மற்றொரு கேள்விக்கும் நிதியமைச்சர் பதிலளிப்பார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமா ஆகியோர் பின்வரும் கேள்விகளை சமர்ப்பித்துள்ளனர்.
டிசம்பர் 2, 2025 அன்று ராஜ்யசபா இணையதளத்தில் வெளியிடப்பட்ட, 'வரவிருக்கும் கேள்விகளின் பட்டியலின்' படி, உறுப்பினர்கள் நிதியமைச்சரிடம் பின்வருவனவற்றைக் கேட்டுள்ளனர்:
நிதியமைச்சரின் கவனத்திற்கு:
- 8வது ஊதியக்குக்ழுவை அமைப்பதற்கான அறிவிப்பை, அதன் விவரங்கள் குறிப்பு விதிமுறைகளுடன் (TOR) அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டதா?
- மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கையாக தற்போதுள்ள DA/DR ஐ மத்திய அரசு அடிப்படை ஊதியத்துடன் இணைக்குமா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன? மற்றும்
- மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை 8வது ஊதியக்குழுவின் கீழ் திருத்தம் செய்ய முன்மொழியப்படவில்லையா? அதற்கான காரணம் என்ன?
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?
இதற்கிடையில், டிசம்பர் 1, 2025 அன்று, ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடி நிவாரணமாக DA/DR அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது குறித்த கேள்விக்கு நிதி அமைச்சகம் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
8வது ஊதியக்குழுவின் தற்போதைய நிலை என்ன? சுருக்கமாக....
- மத்திய அரசு 8வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளை (TOR) அறிவித்துள்ளது.
- மேலும் ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 8வது ஊதியக்குழு 12-18 மாதங்களில் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதற்கிடையில், பல ஊழியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர்களின் அமைப்புகளும் தற்போதுள்ள TOR பற்றி பல கவலைகளை எழுப்பியுள்ளன.
- TOR இல் ஓய்வூதிய திருத்த ஏற்பாடு குறித்து குறிப்பு இல்லாதது அவர்கள் எடுத்துரைத்த மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
- இவற்றுக்கு இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
0 Comments