Header Ads Widget

SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம் ... என்னென்ன தெரியுமா..

SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம் ... என்னென்ன தெரியுமா..?

Last Updated:
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், ஆதார் விவரங்களை யாரும் எளிதில் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். QR ஸ்கேன் முறையில் மட்டுமே தகவல் கிடைக்கும் என்பதால் தரவு பாதுகாப்பில் முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது
SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம்
டிசம்பர் மாதத்திலிருந்து ஆதார் அட்டையில் முக்கியமான மாற்றம் செய்ய உள்ளதாக UIDAI அறிவித்துள்ளது. இனிமேல் ஆதார் அட்டையில் 12 இலக்க எண் அச்சிடப்படாது. அதற்குப் பதிலாக புகைப்படம் மற்றும் கியூஆர் (QR) கோடு மட்டும் இடம்பெறும்.
SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம்
தற்போதைய ஆதார் நகல்களை ஆவணமாக வழங்கும் போது பல இடங்களில் தனிநபர்களின் விவரங்கள் கசிந்துவிடும் அபாயம் இருப்பதாக UIDAI கருதுகிறது. குறிப்பாக ஹோட்டல்கள், சிம் கார்டு பதிவு போன்ற இடங்களில் ஆதார் பிரதி கோரப்படுவது வழக்கம். இந்த ஆவணங்களின் மூலம் சிலர் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம்
இந்த அபாயத்தைத் தவிர்க்க, முதற்கட்டமாக புதிய ஆதார் மொபைல் செயலி அறிமுகமாக இருக்கிறது. தற்போது இருக்கும் mAadhaarக்கு பதிலாக வர இருக்கும் இந்த செயலி மூலம் ஆதார் விவரங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக காட்ட முடியும். இதனால் எதிர்காலத்தில் காகித நகல் அல்லது Xerox கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.
SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம்
புதிய ஆதார் அட்டையில் முகவரி அச்சிடப்படாது. அட்டைதாரரின் பெயர் மட்டும் இடம்பெற வாய்ப்புள்ளது. QR கோடை அரசாங்கம் அங்கீகரித்த கருவி அல்லது செயலி மூலம் மட்டும் ஸ்கேன் செய்து ஆதார் விவரங்களைப் பார்க்க முடியும். இதை சாதாரண சாதனங்கள் மூலம் அணுக முடியாது.
SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம்
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், ஆதார் விவரங்களை யாரும் எளிதில் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். QR ஸ்கேன் முறையில் மட்டுமே தகவல் கிடைக்கும் என்பதால் தரவு பாதுகாப்பில் முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகளை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIR - யை தொடர்ந்து, ஆதார் அட்டையில் வரும் முக்கிய மாற்றம்
ஆதார் விவரங்களை தவறாகப் பயன்படுத்தும் செயல்களை தடுக்க புதிய விதிகளை அறிமுகம் செய்கிறோம். எதிர்காலத்தில் ஆதார் அடையாளம் முழுவதும் டிஜிட்டல் பாதுகாப்பில் இருக்கும்எனத் UIDAI அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . இந்த மாற்றங்கள் டிசம்பர் மாதத்திலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments