Header Ads Widget

படுக்கையில் பலநாள் படுக்காமல்,வந்தோம் போனோம்" என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா??

ராமராமராம.
படுக்கையில் பலநாள் படுக்காமல், உடம்பெல்லாம் பீஷ்மர் போல் ஊசி தைத்துக் கொள்ளாமல், அதைச் சாப்பிடாதே, இதைச்
சாப்பிடாதே, தண்ணீர் குடிக்காதே என்று வெள்ளைக் கோட்டின் கட்டுப்பாடில்லாமல்,  போன்ற ஆஸ்பத்திரிகளை அணுகாமல், ஊரெல்லாம் கடன் வாங்கி பில் கட்டியும் பலனின்றி, உறவினர் நொந்து கொள்ளாமல், யாருக்கும் ஆஸ்பத்திரி, மருந்து, டாக்டர் செலவு, வைக்காமல் "வந்தோம் போனோம்" என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா?? 
இந்த ஸ்லோகத்தை எழுதியவர் ஆதி சங்கரர்.

अनायासेन मरणं 
विनादैन्येन जीवनं 
देहि मे कृपया शम्भो 
त्वयि भक्तिं अचन्चलं 

AnAyAse- na MaraNam, 
VinA Dainyena Jlvanam
DEhi me Kripaya ShambO 
tvayi Bhakthim Achanchalam"

"அநாயாஸேன மரணம் 
விநா தைன்யேன ஜீவனம் 
தேஹி மே க்ருபையா ஶம்போ 
த்வயி பக்திம் அசஞ்சலாம்"

கொஞ்சம் மாற்றியும் இந்த ஸ்லோகம் கிடைக்கிறது:

अनायासेन मरणं 
विनादैन्येन जीवनं 
देहान्त तव सानिध्यम्, 
देहि मे परमेश्वरम्॥

anāyāsena maraṇam 
vinādainyena jīvanaṁ 
dehānta tava sanidhyam, 
dehi me parameśvaram II

"அநாயாசேன மரணம் 
விநா தைன்யேன ஜீவனம்; 
தேஹாந்த தவ சாந்நித்யம் 
தேஹி மே பரமேஶ்வரம்"

"சம்போ மகாதேவா, அப்பா.
எனக்கு தேஹ உபாதை இல்லாத சிரமப்படாத, யாரையும் படுத்தாமல், எவருக்கும் துன்பமில்லாமல், உன்னை நன்றி கலந்த பக்தியோடு நினைத்துக் கொண்டே, இந்த உலகை விட்டு பறக்கும் மரணத்தை கொடுப்பாயா?"

"பரமேஸ்வரா, நான் கேட்பது மூன்று வரம். ஒன்று: கஷ்டமே இல்லாத வலி இல்லாத சுக மரணம்.

ரெண்டாவது: நான் எதற்கும், எவரிடமும், கையேந்தி தஞ்சமடையாமல், சுதந்திரமாக வாழ்ந்து மறையவேண்டும்.

அப்பனே, கடைசியாக மூன்றாவது வரம் என்ன தெரியுமா? என்னை நீ விடவே கூடாது. என் கடைசி நிமிஷத்தில் நீ என்னோடு இருந்து, நான் உன்னை அடைய உதவ வேண்டும்." 

காஞ்சி மகாபெரியவா, ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. நாம் கண்டிப்பாக இதை மனப்பாடம் செய்து, தினமும் பலதடவை வேண்டிக்கொள்வது நமக்கு நல்லது தானே...

श्रीगुरवे नम:
Sri Gurave Namah

Post a Comment

0 Comments