Header Ads Widget

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம்


TN Special Intensive Revision: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் என்ன செய்வது? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறிய விளக்கம் குறித்து முழுத்தகவல் மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தகவல்.

How To Add Name Back To Voter List: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. ஒருவேளை பெயர் நீக்கப்பட்டால் அதன் காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் தெளிவாக ஒட்டப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்?, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆதரவு, எதிர்ப்பு மற்றும் பெயர் சேர்ப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் என்ன செய்வது? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்:

தமிழகத்தில் 6.41 41 கோடி வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்ற பட்டியலில் தீவிர சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. 

2. இந்த பணிக்காக மொத்தம் 83256 பேர், அதாவது 68470 பிஎல்ஓக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

3. அரசியல் கட்சிகளை சேர்ந்த பிஎல்ஓக்கள் 2045340 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியில் துணை புரிகின்றனர். 

4. நாடு முழுவதும் இவ்வளவு அதிக பிஎல்ஓக்கள் ஒரே மாநிலத்தில் செயல்படுவது தமிழகத்தில் தான்.

4. மேலும் 33000 தன்னார்வளர்களும் உதவி செய்கின்றனர். 

5. இதுவரை 6.16 கோடி படிவங்கள் வாக்காளர்களிடம் சென்றுள்ளன. 

6. இதில் பாதி படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. 

7. தற்போது 2.59 கோடி படிவங்கள் கணினி முறையில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. 

8. 327 பிஎல்ஓக்கள் தங்கள் பணியை முழுமையாக முடித்துள்ளனர். 

9. சென்னையில் 96% படிவங்கள் வழங்கப்பட்டு, 50% திரும்ப பெறப்பட்டு, 30% ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

10. ஆன்லைன் வழியாக 2 லட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 

11. வாக்காளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அவர்களால் முடிந்த தகவல்களை மட்டும் அளித்தால், மீதி தகவல்களை பொறுப்பு பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் நிறைவு செய்வார்கள். 

13. தவறான தகவல் அல்லது ஆதாரம் இல்லாமல் பெயர் நீக்கப்படாது. 

14. இறப்பு வீட்டு மாற்றம் நிரந்தர இடமாற்றம் இரட்டை வாக்குரிமை அல்லது படிவம் சமர்ப்பிக்காமை ஆகிய காரணங்களில் ஏதேனும் இருந்தால் மட்டுமே பெயர் நீக்கப்படும். 

15. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரிபார்க்க கடைசி நாள் டிசம்பர் 4 ஆஅம் தேதி. அதன் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் மீண்டும் உங்கள் பெயரை சேர்ப்பதற்கான வழிமுறை என்ன?

தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் பெயரைச் சேர்ப்பதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய இரண்டு வழிமுறைகள் மற்றும் அதற்கான படிவம் உள்ளன.  

1. தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (National Voters' Service Portal - NVSP) அல்லது Voters Helpline App மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

2. படிவம் 6 (Form 6): வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விரும்பும் ஒரு புதிய வாக்காளர் அல்லது ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு இடமாற்றம் செய்தவர் பயன்படுத்தும் படிவம் இதுதான். நீக்கப்பட்ட பெயரை மீண்டும் சேர்க்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் படிவம் எது?

ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டுமெனில், அதற்காகப் பயன்படுத்தப்படுதுத்துவது படிவம் 7 (Form 7) அஆகும். ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு வாக்காளரின் பெயரை நீக்கக் கோருவதற்கு அல்லது நீக்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்க இந்தப் படிவம் பயன்படுத்தப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: ஆதரவும் எதிர்ப்பும்

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் குறிப்பிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR), அதன் நோக்கங்களின் காரணமாக ஆதரவையும், செயல்படுத்தப்படும் முறைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த அச்சங்கள் காரணமாக எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு ஆதரவான நிலைப்பாடுகள் என்ன?

1. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை: வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்குதல், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரண்டு முறை பதிவு செய்தவர்களை நீக்குவதன் மூலம் "ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு, தேர்தலின் நேர்மைத்தன்மை மேம்படுத்தப்படுகிறது.

2. மக்கள் தொகைப் பதிவுகளை பிரதிபலித்தல்: பெருமளவில் ஏற்படும் இடம் பெயர்வு (கிராமப்புறம் → நகர்ப்புறம்), புதிய வாக்காளர்கள் (18+ வயது பூர்த்தியடைந்தோர்) ஆகியோரைச் சேர்ப்பதன் மூலம், வாக்காளர் பட்டியல் தற்போதைய கள நிலவரத்தைப் பிரதிபலிக்கிறது.

3. புதிய வாக்காளர்களைச் சேர்த்தல்: 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் விடுபடாமல் சேர்க்கப்படுவதை உறுதி செய்தல்.

4. வெளிப்படைத்தன்மை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தல், வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ளுதல், ஆட்சேபனைகளைப் பொதுவெளியில் பெறுதல் போன்ற வழிமுறைகள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன.

5. சட்டப்பூர்வ கடமை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 (Representation of the People Act, 1950) பிரிவுகளின்படி, வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்து பராமரிப்பது தேர்தல் ஆணையத்தின் அடிப்படை கடமையாகும்.

சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான நிலைப்பாடுகள் என்ன?

1. உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படும் ஆபத்து: ஊரகப் பகுதிகள் மற்றும் விளிம்புநிலை மக்களிடையே, தேவையான கூடுதல் ஆவணங்கள் (பிறப்புச் சான்றிதழ், பெற்றோர் விவரம் போன்றவை) இல்லாத காரணத்தால், உண்மையான தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்படும் ஆபத்து உள்ளது.

2. குறிப்பாக, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும்.

3. தேர்தல் நேரத்தின் நெருக்கம் (Timing): மிகப் பெரிய அளவிலான சட்டமன்றத் தேர்தல்கள் போன்ற முக்கிய தேர்தல்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இத்தகைய முழுமையான திருத்தப்பணியை மேற்கொள்வது, குழப்பத்தையும், செயல்பாட்டுப் பிழைகளையும், ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தலாம்.

4. செயல்படுத்துதல் குறைபாடுகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLO) சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, படிவங்கள் விநியோகிக்கப்படுவதில் தாமதம், ஆன்லைனில் முழுமையான பட்டியல்கள் இல்லாதது போன்ற செயல்பாட்டுப் பிழைகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

5. அரசியல் உள்நோக்கம்: வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிப்பது என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகளவில் திட்டமிட்டு நீக்கப்படலாம் என்ற அரசியல் ரீதியான அச்சம்.

6. நடைமுறை தெளிவின்மை: "சிறப்பு தீவிர திருத்தம்" என்ற வார்த்தை, தேர்தல் விதிமுறைகளில் வெளிப்படையாக இல்லாததால், இந்தச் செயல்முறையின் நடைமுறை தெளிவு மற்றும் பெயரிடல் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.


Post a Comment

0 Comments