Header Ads Widget

ராஜ்நாத் சிங் கருத்தால் பாகிஸ்தானின் சிந்து பற்றி விவாதம் - இந்த பகுதியின் வரலாறு என்ன?

ராஜ்நாத் சிங் கருத்தால் பாகிஸ்தானின் சிந்து பற்றி விவாதம் - இந்த பகுதியின் வரலாறு என்ன?

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் பற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அமைச்சரின் கருத்தை 'விரிவாக்கவாத சிந்தனை' என்று விமர்சித்துள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் இதை 'தூண்டிவிடும் மற்றும் திரித்துக் கூறப்பட்டும்' கருத்து என்று கூறியுள்ளது.

"சிந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், நாகரிகத்தின் பார்வையில் அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்" என்று ஞாயிற்றுக்கிழமை ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

மேலும் அவர், "எல்லைகள் மாறலாம், யாருக்கு தெரியும்? நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்கு வரலாம்," என்றும் கூறியிருந்தார்.

ராஜ்நாத் சிங், பாஜகவின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி, சிந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதுகின்றனர் என்று கூறினார்.

1947 பிரிவினைக்குப் பிறகு சிந்து பாகிஸ்தானுடன் இணைந்தது, அப்போது நடந்த இடம்பெயர்வின் போது லட்சக்கணக்கான இந்து சிந்தி குடும்பங்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறின.

லால் கிருஷ்ண அத்வானியின் குழந்தைப் பருவம் சிந்து பகுதியில்தான் கழிந்தது. அவரது குடும்பம் இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்தது. 2005 ஆம் ஆண்டில், அவர் சிந்துவுக்குப் பயணம் செய்திருந்தார்

பாகிஸ்தான் வசமான சிந்து மாகாணம்

பிரிட்டிஷ் இந்தியாவில் சிந்துப் பகுதி பம்பாய் மாகாணத்தின் கீழ் வந்தது.

இந்தியா அல்லது மற்ற நாடுகளுக்குச் சென்றன.

சிந்து நதியின் காரணமாக இந்தப் பகுதி எப்போதும் வளமானதாக இருந்துள்ளது. இங்கு குறிப்பாகப் பருத்தி பயிரிடப்படுகிறது, மேலும் இன்று வரை மாகாணத்தின் தலைநகரான கராச்சி, பாகிஸ்தானின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாக இருக்கிறது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மக்ளி ஹில் நெக்ரோபோலிஸ், உலகின் மிகப்பெரிய கல்லறைகளில் ஒன்றாகும்.

கலாசார மையம்

இந்தப் பகுதி கலாசார ரீதியாக மிகவும் வளமானது மற்றும் இங்குள்ள பல பழங்கால இடங்களை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவித்துள்ளது.

கராச்சியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மக்ளி ஹில் நெக்ரோபோலிஸ் பல பழங்கால கல்லறைகளைக் கொண்டுள்ளது.

யுனெஸ்கோவின் இணையதளத்தின்படி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டாவிற்கு அருகில் அமைந்துள்ள மக்ளி நெக்ரோபோலிஸ் உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான கல்லறைகளில் ஒன்றாகும்.

இது துறவிகள், கவிஞர்கள், ஆளுநர்கள், இளவரசர்கள், பேரரசர்கள் மற்றும் ராணிகளின் கல்லறைகள், கல்லறை மாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன் உலகின் மிகப்பெரிய கல்லறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சின்னங்கள் சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளன. இங்கு சுமார் ஐந்து லட்சம் கல்லறைகள் மற்றும் சமாதிகள் உள்ளன.

இங்குள்ள கட்டடக்கலை இஸ்லாமிய, இந்து, பாரசீக, முகலாய மற்றும் குஜராத்தி தாக்கங்களின் செழுமையான கலவையைக் காட்டுகிறது.

இந்தக் கல்லறைகள் அவற்றின் நீல பளபளப்பான ஓடுகள், நுணுக்கமான செதுக்கல்கள், அழகான கையெழுத்து மற்றும் வடிவமைப்புகளுக்காகப் பிரபலமாக அறியப்படுகின்றன.


சிந்துவில் மதமாற்ற விவாதங்கள்

இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மதமாற்றம் தொடர்பாக சிந்து மாகாணம் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

2021-ஆம் ஆண்டில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராட் ஷெர்மன் சிந்துவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாகின்றன என்று குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையமும் அதன் அறிக்கை ஒன்றில் சிந்துவில் உள்ள இந்துப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Post a Comment

0 Comments