Header Ads Widget

கவலைப்படுவதால் என்ன நிகழ்கின்றது என்று உணர்ந்தால் !

கவலைப்படுவதால் என்ன நிகழ்கின்றது என்று உணர்ந்தால் !!?? 

கவலைப்படுவதை நீங்களே தவிர்த்து விடுவீர்கள் !!
உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பே நீங்கள் வாழும் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றது !!

அதாவது உங்கள் எண்ணத்தின் அதிர்வலைகளை சாத்தியப்படுத்திக்கொண்டே இருக்கின்றது இறைப்பேராற்றல் .

.
அதாவது உங்கள் எண்ண அலைகள் உங்களிடம் இருந்து வெளிப்பட்டு, அதிலும் அந்த எண்ணத்தை எவ்வளவு ஆழ்ந்து நினைக்கிறீர்களோ, அவ்வளவு வீரியத்துடன் அது பிரபஞ்சபேராற்றலோடு கலந்து அந்த எண்ணத்திற்கு தொடர்புடையதை எல்லாம் உங்கள் எண்ணம் போல மாற்றி அதை உங்களிடம் ஈர்த்து வந்து சேர்த்துவிடும் !!

இப்போது கவலை என்ற உணர்வை கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள்..
இது இப்போதே இப்படி இருக்கே !! இது இன்னும் இப்படி ஆகிவிட்டால் இன்னும் பாதிக்குமே என்பதே உங்கள் கவலையின் அடிப்படையான காரணமாக இருக்கும் ..

இப்படியே கவலையை குறித்து நீங்கள் இன்னும் இன்னும் ஆழ்ந்து ஆழ்ந்து நினைத்து, 
அது எப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கும் தாக்கத்தை விளைவிக்க போகிறது என்ற உங்கள் எண்ணமாகிய ஏக்கமாகிய எதிர்பார்ப்பை இறையாற்றலிடம் விதைத்து ..
அதற்கான பலனை அனுபவிக்கிறீர்கள் என்பதே உண்மை ..

இப்போது கவலைப்படுகிறேன் என்ற உணர்வு மேலும் உங்கள் விருப்பமான கவலை என்ற உணர்வை நீங்கள் மேலும் அனுபவிக்க வழிசெய்கிறது ..
எப்படியும் உங்களை கடந்து போவதை தான் நீங்கள் எப்போதும் எதிர்கொள்கிறீர்கள் என்பதே நிஜம் !!

அப்படி கடந்து போவதை கவலை படுகிறேன் என்ற பெயரில் இழுத்து வந்து சிந்தித்து எண்ணமாக்கி அதை நீங்களே பிரதிபலிக்க செய்து அதன் தாக்கத்தை அனுபவித்து !!
நான் நினைத்ததுபோலவே நடந்து விட்டது என்றும் புலம்புவதும் நீங்கள் தான் ..

முடிந்ததை எண்ணி கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை !!
இனி இப்படி கவலைப்படுவதால் நீங்கள் மேலும் கவலையை வரவேற்கிறீர்கள் !!

இந்த கவலை என்ற எண்ணத்தை மாற்றவே இறைவழிபாடு என்ற ஒன்று நமக்கு வழிகாட்டுகிறது ..
எப்படியும் இறைவன் இருக்கிறான், அவன் நாமத்தை சொல்வோம், பாடுவோம், கொண்டாடுவோம் !!

எவ்வளவோ பிரச்சனையில் இருந்து எல்லாம் நம்மை காப்பாற்றிவிட்டு இருக்கிறான் தானே !!

அவனே இதையும் சரிசெய்வான் என்ற திடம் உங்களுள் பெறுக ..
அதுவும் உங்கள் எண்ண அலைகள் வழியே பிரதிபலித்து ..
முடியாது என்ற ஒன்றை கூட எப்படி முடிந்தது என்று நீங்களே ஆச்சரியப்படும்படி முடிந்து கடந்து வந்து விடுவோம் !!

எண்ணத்தின் ஆளுமைக்கு நீங்கள் அடிமையாகாது !!
எண்ணத்தை நீங்கள் உங்கள் ஆளுமைக்கு கொண்டுவர தெரிந்துவிட்டால்
 எந்நாளும் இன்பமே.

Post a Comment

0 Comments