"நீண்டகாலமாக மனித குலம் பிறவித் தொடரை வினைப்பதிவின் விளைவுகளை ஆராய்ந்து கொண்டுதான் வருகிறது. எனினும் காந்த ஆற்றல் தத்துவத்தையும் அதன் கருமையை அமைப்பாக மாறிச் செயல்படுகின்ற உண்மைகளையும் உணர்ந்தால் அல்லாது பிறவித் தொடரைப் பற்றிய உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியாது.
மேலும் ஒரு சிறப்பியக்கம் இந்தக் கருமையத்திற்கு உண்டு. கருமையம் காந்த ஆற்றலின் திணிவு. ஆகையினால் பிரபஞ்சத்தில் வாழுகின்ற உயிர்கள் அனைத்திலும் உள்ள கருமையத்தொடு தொடர்பு கொண்டு அதிலுள்ள அலை வடிவில் சுருங்கி இருக்கக்கூடிய தன்மைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.
இதற்குக் கைவல்யமானது மனதைக் கருமையத்தின் மீது அமர்த்திச் செய்யும் அகத்தவத்தின் மூலம் மனதின் சுழல் விரைவுகளைக் (Mind Frequency) குறைத்துக் கருமையத்தில் (Genetic Center) அடங்கியுள்ள சுழல் விரைவுகள் எதனோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய முறை.
அப்பொழுது இந்த அகத்தவச் சாதனையாளர்களுக்குத் தனக்கு அப்பாலுள்ள எந்த ஜீவனின் கருமையத்திலும் அமைந்துள்ள உண்மைகள் யாவும் தெளிவாகத் தெரிந்து விடும். இந்த முறையில் மனிதன் பெறுகின்ற பெரும்பேறு ஒன்று இறையுணர்வு (Divine Consciousness) ஆகும். இன்னொரு பேறு அறிவறியும் பேறு எனப்படும். இந்த இரண்டும்தான் மனிதப் பிறப்பில் அமைந்துள்ள நோக்கமாகும்.
இந்த மனநிலைக்கு அறிவை இணைத்து விட்டால் (to adjust or attuned the Mind with the static state), தேவையற்ற கற்பனையான எண்ணங்கள் விருப்பங்கள் (imaginary expectations) யாவும் முடிவு பெற்று விடும். இந்த மன நிலையில் தான் செய்த தவறுகளின் பயன்களை ஒரே பிறவியில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதுவே மனித அறிவின் முழுமைபேறு.
மன அலைச் சுழலை எந்த நிலைக்கும் கொண்டு வந்து உலகில் வாழக்கூடிய உயிரினங்கள் எதனோடும் தொடர்பு கொள்ளவும் இறைநிலைக்கே வந்து அங்கிருந்து மனிதனான வரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அத்தனையும் தனது அனுபவமாகவே உணருகின்ற பேறு பெற கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உன்னதக் கலைதான் உலக சமுதாய சேவா சங்கத்தின் அகத்தவமாகிய குண்டலினியோகம் ஆகும்"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
* * * * * * * * * * * * * * * * * *
குண்டலினி சக்தி:
"வித்து இடமாய்த் தொடங்கி இரத்தத்திலே பரவி
சத்து சுழலாய் நரம்பில் தன் விரைவு மேலோங்கி
வித்தைபோல் மூளைதனில் விவேக உணர்வுகளாகும்
சித்துதான் மனித காந்தம் சிறப்புப் பெயர் குண்டலினி"
.
"அகத் தவத்தின் பொருள் கண்டு
அதன் பெருமை உணர்ந்திடுவீர்
அகத் தவமோ உயிரினிலே
அறிவை ஒடுக்கும் பயிற்சி
அகத் தவத்தால் மேலும் உயிர்
அம்மாகி மெய்ப்பொருளாம்
அகத் தவத்தால் வீடுணர்ந்து
அமைதி பெற்று இன்புறலாம்!"
.
அகத்தவத்தகுதி:
"குண்டலினி சக்தி யெனும் தீட்சை ஈதே
கொள்பவர்க்கு வயதுபதினாறின்மேல் ஆம்
பெண்களுக்கும் இந்தத் தவம் ஒத்ததாகும்
புகை குடிகள் ஆகாது ஒழுக்கம் வேண்டும்
கொண்டவர்கள் குடும்பத்தில் கடமையாற்றி
குரு காட்டும் தவ முறையைப் பயின்றுவந்தால்
அண்ட பிண்டம் ஒன்றான ஆதியந்தம்
அறிந்தமைதி கிட்டும் அதே பேரானந்தம்"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
0 Comments